ஏர் மவுஸ்

tech_2692153f

கணினி அல்லது லேப்டாப்பை இயக்கும் கையடக்க மவுஸை வயர் மூலமாக இணைத்தோ அல்லது வயர் இல்லாமலோ பயன்படுத்தி வருகிறோம். எந்த இடத்தில் என்றாலும் இதை இயக்க ஒரு சமதளமான இடம் தேவை. தற்போது ஏர் மவுஸ் என்கிற தொழில்நுட்பம் ஒரு பேனா வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உருளையான கருவியை தற்போதைய மவுசைவிடவும் பல மடங்கு இலகுவாக பயன்படுத்தலாம். கையில் பேனா போல வைத்துக்கொண்டு இடது, வலது பக்கங்களில் திருப்பி இதன் சென்சார்கள் மூலம் கணினியை இயக்கலாம். ஜூம், செலக்ட், கட், பேஸ்ட் வசதிகள் என அனைத்து இயக்கங்களும் இதில் மேற்கொள்ளலாம். இதை டிவி ரிமோட்டாகவும் பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் டேப்

உயரம், நீளம், அகலங்களை அளப்பதற்கான டிஜிட்டல் மீட்டர் இது. சாதாரணமாக இது போன்ற தேவைகளுக்காக ஒவ்வொரு இடத்துக்கும் டேப்புகளை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். தவிர மீட்டர்களின் இன்னொரு முனையை சரியான அளவில் பிடிக்க இன்னொருவரது உதவியும் தேவைப்படும்.

இதை அத்தனையும் எளிதாக மாற்றுகிறது இந்த டிஜிட்டல் மீட்டர். அளக்க வேண்டிய இடத்தில் வைத்து இயக்கினால் இதன் லேசர் சென்சார்கள் எதிர்முனையில் படுகிறது. எங்கிருந்து அளவு வேண்டும் என இந்த லேசரை நிறுத்தினால் துல்லியமான அளவு கிடைத்து விடும்.

Leave a Reply