வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை கவனியுங்கள்!

201601081820070275_Home-LoanConsider-interest-rates_SECVPF

வீட்டுக்கடன் வழங்குவதில் வங்கிகள் தாராளமய கொள்கையை கடைபிடிப்பதால் பலரும் வீட்டுக்கடன் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். சரியான ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் வீட்டுக்கடன் சிக்கலின்றி கிடைக்கும். தற்போது வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வீட்டுக்       கடன் வாங்குபவர்களை கவரும் விதத்தில் சலுகைகளையும் அறிவிக்கின்றன.

வட்டி விகிதம்

அவற்றுள் வட்டி குறைப்பு சலுகை குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. எனினும் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி சற்று மாறுபடும் விதத்தில் இருக்கிறது. வட்டி விகிதங்களை கணக்கிடும் அளவுகோலிலும் இந்த மாறுபாடு வெளிப்படு     கிறது. மாறுபடும் வட்டி விகிதம், நிலையான வட்டி விகிதம் உள்ளிட்ட நிலைப்பாடுகள் இருக்கின்றன.

அவற்றில் எந்தவிதமான வட்டி விகிதங்களை தேர்வு செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதை பொறுத்தும் கூட வட்டி விகித மாறுபாடு இருக்கும். சிலர் வீட்டுக்கடன் கிடைத்த நிம்மதியோடு வட்டி விகித மாறுபாடுகளை கவனிக்காமல் இருந்து விடுவார்கள்.

தவணை தொகை

குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் வட்டி விகிதத்தில் மாறுபாடு ஏற்படும்போது அதனை கண்காணிப்பது அவசியம். அந்த வட்டி விகித மாறுபாட்டிற்கு ஏற்ப மாத தவணை தொகையில் (இ.எம்.ஐ) ஏதேனும் மாறுபாடு இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் வட்டி விகிதம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ மாத தவணை தொகை வித்தியாசப்பட வாய்ப்பு இருக்  கிறது.

இப்போதெல்லாம் வங்கி கணக்கில் இருந்தே நேரடியாக மாத தவணை தொகை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யும் நடைமுறை இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை கவனித்து வர வேண்டியது அவசியம். சில மாதம் மாத தவணை தொகை அதிகமாக பிடிக்கப்பட்டு இருக்கலாம். அதற்கு வட்டி விகிதம் மாறுபாடு அடைந்      திருப்பது காரணமாக இருக்கலாம்.

அசல் தொகை ஒப்பீடு

வீட்டுக்கடன் விண்ணப்பித்து அதற்கான தொகையை பெற்றவுடன் இருக்கும் மன நிறைவு கடனை முடிக்கும் வரை தொடர வேண்டும். அதற்கு அட்டவணை போட்டு கடன் நிலவரத்தை கணக்கீடு செய்து வர வேண்டும். மொத்த கடன் தொகை எவ்வளவு? மாத தவணை தொகை (இ.எம்.ஐ.) எவ்வளவு? வட்டிக்கு எவ்வளவு தொகை எடுக்கப்படுகிறது? அசல் தொகை எவ்வளவு செலுத்துகிறோம்.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது எவ்வளவு? கடன் வாங்கிய பிறகு வட்டி விகிதம் மாறு பட்டு இருக்கிறதா? என்பதை பட்டியலிட்டு கவனித்து வர வேண்டும். ஏனெனில் வட்டி விகிதம் குறையும் போது சில வங்கிகள் உடனடியாக வட்டி விகிதத்தை குறைப்பதற்கு முனைப்பு காட்டாது. அதனால் வட்டி விகிதம் குறைந்து இருந்தால் அதற்கேற்ப மாத தவணை தொகையில் ஏதேனும் மாறுபாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

கடன் கால அளவு

அதே வேளையில் வட்டி விகிதம் உயர்ந்து கொண்டிருந்தால் உடனே கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி விடுவார்கள். அது மாத தவணை தொகையில் எதிரொலிக்கும். சில இடங்களில் வட்டி விகிதம் உயர்ந்து போனால் மாத தவணை தொகையை உயர்த்தாமல் செலுத்தும் கால அளவை நீட்டித்து விட்டு விடுவார்கள். அப்படி இருந்தால் அது பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஏனெனில் 20 வருடங்களில் முடிப்பதாக திட்டமிட்டப்பட்டிருக்கும் வீட்டுக்கடன் காலம் வட்டி விகித உயர்வுக்கு ஏற்ப சில வருடங்கள் நீட்டிக்கப்பட்டு இருக்கும். கடன் வாங்கியவர்கள் கடன் முடிவடையும் காலத்தை மனதில் கொண்டு பணத்தை செலுத்தி கொண்டு இருப்பார்கள். ஆனால் சில வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை அறியாமல் போனால் தவணை தொகை நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கும். சில காலத்திற்கு பிறகு திரும்ப செலுத்திய தொகையை கணக்கிட்டு பார்த்தால் மலைப்பாக இருக்கும்.

திட்டமிடல் அவசியம்

20 வருடங்களில் முடிவடைய வேண்டிய கடன் 25 ஆண்டு வரையிலும் நீடித்து போகும் நிலை ஏற்பட்டு விடும். ஆதலால் வட்டி விகிதம் உயர்வடைவதாக இருந்தால் எந்த வகையான நடைமுறையை வங்கிகள் கடைபிடிக்கும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும். வீட்டுக்கடன் காலம் வரையிலும் மாதத்தவணை தொகையை செலுத்தும் திட்டத்துடன் இருக்கக்கூடாது.

குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்னதாகவே கடனை முடிப்பதற்கு முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் வட்டி விகிதத்தால் கூடுதல் தொகையை செலுத்தும் நிலையை தவிர்க்க முடியும்.

Leave a Reply