12-வது ஆண்டில் ஃபேஸ்புக் நண்பர்கள் தினமாக கொண்டாடுங்கள்: மார்க் ஜூகர்பெர்க் வேண்டுகோள்

facebookபேஸ்புக்கின் 12-வது ஆண்டு தினத்தை நண்பர்கள் தினமாகக் கொண்டாடும்படி, அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் வரும் பிப்ரவரி 4-ம் தேதி 12-வது ஆண்டை நிறைவு செய்கிறது. ஆரம்பத்தில் தனது கல்லூரி மாணவர்கள் ஒருவருக் கொருவர் தொடர்பு கொள்வதற் காக, பேஸ்புக் மென் பொருளை ஜூகர்பெர்க் வடிவமைத்தார். பின்னர் அது மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது 150 கோடிப்பேர் ஃபேஸ்புக் பயனாளர்களாக உள்ளனர்.

இதனிடையே, ‘வரும் பிப்ரவரி 4-ம் தேதி நண்பர்கள் தின கொண்டாட்டத்தில் என்னுடன் இணைவீர்கள் என நம்புகிறேன். உங்கள் வாழ்க்கையில் திருப் பத்தை ஏற்படுத்திய நட்பை கொண்டாடும் தினம். உங்களிடம் நட்பைப் பற்றிய கதை இருந் தால் அதை கேட்க நான் ஆவ லாக இருக்கிறேன். தயவு செய்து அதைப் பகிருங்கள்” என ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூகர்பெர்க் பதிவு செய்துள்ளார்.

2016-ல் சுயஅறிவுடன் செயல் படும் இயந்திரத்தை உருவாக்கு வதே தனது இலக்கு என ஜூகர் பெர்க் குறிப்பிட்டிருந்தார். அயர்ன் மேன் படத்தில் வருவது போல, வீட்டிலும் அலுவலகத்திலும் உதவி யாக இருக்கும் செயற்கை அறிவு கொண்ட கருவியை உருவாக் குவதில் கவனம் செலுத்தப்போ வதாக அவர் ஏற்கெனவே தெரிவித் திருந்தார்

Leave a Reply