குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் அன்றாடம் கீரையை சேர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. கீரையின் பயன்களை நாம் அறிந்திருந்தாலும் அதை உணவில் சேர்த்துக் கொள்ள தயங்குகிறோம். இதன் காரணமாக சத்துக் குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறோம்.. தண்ணீர் கீரை ஆரோக்கியத்தை தருவதோடு தோல் முடி பிரச்சனைகளை சரி செய்கிறது.
தாதுசத்து அதிகமுள்ள தண்ணீர் கீரை மிகச்சிறந்த உணவாகும். கால்சியம், இரும்புசத்து உள்ளிட்ட சத்துக்கள் இக்கீரையில் உள்ளது. உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்கள் தண்ணீர் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் கொழுப்பு குறையும். உடல் எடையை கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதில் இக்கீரை மகத்தான பங்காற்றுகிறது.
குடல் புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு பேதி மருந்தாக தண்ணீர் கீரை பயன்படுகிறது. ஃபைபர் சத்துகளை அதிகளவு கொண்டுள்ள தண்ணீர் கீரை செரிமானக் கோளாறுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.. மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையால் அவதி படுபவர்கள் கீரையை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
குடல் புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. ஆகவே வாரத்தில் மூன்று நாட்கள் கீரையை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.