இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உதவத் தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டூஜரிக் கூறும்போது, “இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதில் பான் கி மூன் எப்போதுமே உறுதியாக இருந்திருக்கிறார். பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க, தேவையான அறிவுரைகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்” என்றார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையை வேறு ஒரு நாளில் நடத்துவது தொடர்பாக இருநாட்டு வெளியுறவுச் செயலர்களும் தொலைபேசியில் ஆலோசித்தனர்.
இதற்கிடையில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய புள்ளிகளை, பாகிஸ்தான் தடுப்புக்காவலில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.