ஃபேஸ்புக்கின் இந்திய வருமானம் 27% உயர்வு.
உலகின் நம்பர் ஒன் சமுக வலைத்தளமாக கடந்த பல வருடங்களாக விளங்கி வரும் ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவது போல் அந்நிறுவனத்தின் வருமானமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்து மட்டும் கடந்த 2014-15 நிதியாண்டில் 123.5 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் இந்திய பேஸ்புக் வருவாய் 27 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் இந்த வருவாய் 97.6 கோடியாக இருந்தது. அதேபோல் கடந்த 2012-13ல் இந்த வருவாய் 75.6 கோடியாக இருந்துள்ளது.
இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் ஒருவருக்கு சராசரியாக ரூபாய் 9 என்ற மதிப்பில் பேஸ்புக் வருவாய் ஈட்டியுள்ளது. அமெரிக்காவில் ஒரு பயன்பாட்டாளர் மூலமாக இந்நிறுவனத்துக்கு வருவாய் இந்திய மதிப்பில் ரூபாய் 630 ஆக உள்ளது.