விஜய்க்கு எதிராக சதி செய்யும் வெளிநாட்டு சக்திகள். திடுக்கிடும் தகவல்
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் துவங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லனாக பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் நடித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் கதைப்படி நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள விஜய்க்கு எதிரான வெளிநாட்டு சதிகாரர்கள் வில்லன் மகேந்திரனின் தூண்டுதலின்படி சதி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் பல்கேரிய நாட்டு பிரபல நடிகர் லோபோ என்பவர் மகேந்திரனின் கூட்டாளியாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சமந்தா, எமிஜாக்சன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.