இந்திய-பாகிஸ்தான் எல்லையில் லேசர் சுவர்கள். மத்திய அரசு திட்டம்
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இரு நாட்டு எல்லையில் எந்தத் தீவிரவாத ஊடுருவலும் நடக்க கூடாது என்று கருதும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிக சக்தி வாய்ந்த லேசர் சுவர்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவை என சந்தேகிக்கப்படும் 48-க்கும் மேற்பட்ட பகுதிகளில் லேசர் சுவர்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள நீண்ட ஆற்றுப் படுகையில் லேசர் சுவர் அமைக்கும் தொழில்நுட்பம் எல்லைப் பாதுகாப்பு படையால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் தீவிரவாதிகள் ஊருடுவலை எல்லைப் பாதுகாப்பு படை முற்றிலும் அகற்ற உள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தொழில்நுட்ப முறையில் லேசர் சுவர் அமைக்கப்படுவதால், எல்லையில் ஊடுவலை எளிதான முறையில் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 4 வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் இப்பகுதியில் நடந்தது கிடையாது. இப்போது பஞ்சாப் மாநிலத்தில் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு படையானது பணியில் ஈடுபட்டு உள்ளது. இரவு, பகலாக தொடர்ந்து படகிலும் ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.