ரூ.7,499 விலையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபேண்டாபுல்லட் ஸ்மார்ட்போன்

download (1)

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் ஃபேண்டாபுல்லட் என்ற புதிய ஸ்மார்ட்போன் ரூ.7,499 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கேன்வாஸ் வரம்பு கைப்பேசி ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் மற்றும் குரோம் கோல்டு வண்ணத்தில் வருகிறது. இதன் முக்கிய சிறப்பம்சமாக மிகப்பெரிய 6.98 இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபேண்டாபுல்லட் ஈரோஸ் நவ், கின்டெல், Saavn, மற்றும் கானா போன்ற மற்றும் பல அப்ளிக்கேஷனுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சமாக, DTS தொழில்நுட்பம் மூலம் இயங்கும் டூயல் பாக்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. மேலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், Saavn ப்ரோக்காக இலவச 90 நாள் சந்தாவை வழங்குகிறது.

டூயல் சிம் ஆதரவு கொண்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபேண்டாபுல்லட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபேண்டாபுல்லட் ஸ்மார்ட்போனில் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.98 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபேண்டாபுல்லட் ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த கைப்பேசியில் 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், FM ரேடியோ, 3ஜி, ஜிஎஸ்எம் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.

Leave a Reply