சென்னை விமான நிலையத்தில் ரஷ்ய பாதிரியாருக்கு அவமரியாதையா? ரஷ்யா கடும் கண்டனம்
ரஷ்யா பாதிரியார் செபிராம் என்பவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு ரஷ்ய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடன் நட்பு நாடாக இருக்கும் இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இருநாட்டு நல்லுறவுக்கு உகந்ததல்ல என்று கண்டிப்புடன் கூறியுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், “”பாதிரியார் செபிராமுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கூட அளிக்கப்படவில்லை. ரஷ்ய தூதரகமும், சென்னையில் உள்ள ரஷ்ய துணை தூதரும் கேட்டுக் கொண்டும் எந்த உதவியும் அளிக்க மறுத்துள்ளனர். அவரை ரஷ்ய தூதரகம் தொடர்பு கொள்ளவும் அனுமதி இறுத்து விட்டனர். இத்தகைய செயலை ஏற்க முடியாது. நட்பு நாடான இந்தியா, எங்கள் நாட்டு பாதிரியாருக்கு செய்த அவமரியாதை. இது ரஷ்யா-இந்தியா நட்புறவுக்கு நல்லதல்ல” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வந்த ரஷ்யா பாதிரியார் செபிராமை, சென்னை விமான நிலையத்தில் இருந்து குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அவர் திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை இதுவரை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.