அஜித்துக்கு மீண்டும் ஜோடியாகும் தமன்னா
அஜித் நடித்த வேதாளம்’ கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்துள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தையும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த சிவா இயக்கிய ‘வீரம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா ஏற்கனவே நடித்துள்ளதால், அதே வெற்றி ஜோடி மீண்டும் இணைய அதிக வாய்ப்புள்ளதாகவும். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது. ஆனால் அஜித் படத்தில் நடிக்க வேண்டாம் என தமன்னாவுக்கு ஒருசிலர் அட்வைஸ் செய்து வருவதாக உறுதிபடுத்தாத தகவல்களும் கோலிவுட்டில் கசிந்து வருகின்றது.
அதேபோல் அஜித் படத்திற்கு மீண்டும் இசையமைக்க அனிருத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.