விளம்பரத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜரானாரா கருணாநிதி? மு.க.ஸ்டாலின் விளக்கம்

விளம்பரத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜரானாரா கருணாநிதி? மு.க.ஸ்டாலின் விளக்கம்

karuna and stalinமதுவிலக்கு போராட்டம், ஜல்லிக்கட்டுக்கு தடை, சட்டமன்ற தேர்தல் ஆகிய பரபரப்புகளுக்கு இடையே தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய இரண்டையும் முக்கிய பிரச்சனைகளாக எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில் ஆளும்கட்சியும் இந்த எதிர்ப்புகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த கூட்டத்தொடரில் மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் அறிவிப்பை வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்நிலையில் மதுவிலக்கு உள்பட முக்கியப் பிரச்சினைகளை சட்டப்பேரவையில் திமுக எழுப்பும் என அக்கட்சியின் பொருளாளரும், சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்..

நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என திமுக தொடர்ந்து போராடி வருகிறது. எனவே, மதுவிலக்கு குறித்தும் மற்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் சட்டப்பேரவையில் திமுக குரல் எழுப்பும்.

விளம்பரத்துக்காக திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானார் எனக் கூறுவது சரியல்ல. மற்றவர்களைப் போல வாய்தா வாங்காமல் வழக்குகளை நேரில் அவர் எதிர்கொண்டுள்ளார்.

திமுகவைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம். ஆனால், அதிமுக செய்திகளுக்கு மட்டுமே ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன” என்று ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply