கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாட்டிறைச்சி தடை நடவடிக்கைகளுக்கு பழிக்கு பழியாக பிரதமர் மோடி மற்றும், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் ஆகிய இருவரையும் தாக்கவுள்ளதாக மர்ம மிரட்டல் கடிதம் ஒன்று கோவா காவல்துறைக்கு வந்துள்ளது., இந்த கடிதம் குறித்து கோவா போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவா பொது நிர்வாகத் துறைக்கு வந்த அந்த மர்ம கடிதம், கோவா போலீஸுக்கு அனுப்பப்பட்டதாக மாநில காவல் ஆணையர் வி.ரங்கநாதன் ‘செய்தியாளர்களீடம் தெரிவித்தார்.
மேலும் அந்தக் கடிதத்தில், “மாட்டிறைச்சி உண்ண நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், அதற்காக நீங்கள் பழி தீர்க்கப்படுவீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அந்தக் கடிதம் உள்ளூரிலிருந்து அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடர்ந்து மனோகர் பரிக்கருக்கு கோவாவில் பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.