குளிர்காலத்தில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று மூக்கடைப்பு. சளிப் பிரச்சனை ஏற்படும் போது மாற்றான் சகோதரன் போல ஒட்டிக் கொண்டு வரும் பிரச்சனை தான் மூக்கடைப்பு. இதிலிருந்து விடுபட ஆங்கில மருந்துகளை தேடுவதைவிட உங்கள் வீட்டு சமையல் அறைப் பொருட்களே போதுமானது என இயற்கை மருத்துவ வைத்தியர்கள் கூறுகிறார்கள்….
இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
புதினா இலைச்சாறுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
புதிய ரோஜா மலரை எடுத்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சுவாசநோய் அலர்ஜி குறையும்.
மணலிக் கீரையுடன், மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குறையும்.