சர்வதேச சந்தை விலை வீழ்ச்சிக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதா?

சர்வதேச சந்தை விலை வீழ்ச்சிக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதா?
vengaiya-naidu
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் சர்வதேச சந்தையின் வீழ்ச்சிக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகள் குற்றம் கூறி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கூறும்போது, சர்வதேச சந்தையோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் குறைவு என்று  தெரிவித்து உள்ளார்.

நேற்று கன்னியாக்குமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ”தமிழக தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். நாட்டின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கே பெட்ரோல், டீசல் வரி உயர்வு பயன்படுகிறது. சர்வதேச சந்தையோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவு.

மேலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத் தலித் மாணவர் தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி., ரியல் எஸ்டேட் மசோதாக்கள் நிறைவேற்றப்படும்” என கூறியுள்ளார்.

ஆனால் சர்வதேச சந்தையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் பாதியாக குறைக்கலாம் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply