சினிமாவில் அறிமுகமாகிறார் விஜய்யின் மகள் திவ்யா

சினிமாவில் அறிமுகமாகிறார் விஜய்யின் மகள் திவ்யா
vijay-daughter
இளையதளபதி விஜய்யின் மகன் சஞ்சய் ‘வேட்டைக்காரன்’ என்ற படத்தில் ‘நான் அடிச்சா தாங்க மாட்டே’ என்ற பாடலில் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடினார். அதன்பின்னர் பல படங்களில் சஞ்சய்க்கு வாய்ப்பு வந்தபோதும் அவரை விஜய் நடிக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகள் திவ்யா ஒரே ஒரு காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ‘தெறி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லடாக்கில் நடைபெற்றபோது விஜய்யின் மகள் திவ்யாவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும், அவர் விஜய்யின் மகளாக ஒரே ஒரு காட்சியில் நடித்துள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து செய்தி கசிந்துள்ளது.

ஏற்கனவே ‘தெறி’ படத்தில் விஜய் மகளாக பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ள நிலையில் விஜய்யின் மகள் திவ்யாவும் நடித்துள்ளது விஜய் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு  பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

Leave a Reply