இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்த ரூ.30,000 கோடியை தீயிட்டு எரிக்க முடிவா? அதிர்ச்சி தகவல்

இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்த ரூ.30,000 கோடியை தீயிட்டு எரிக்க முடிவா? அதிர்ச்சி தகவல்
rbi
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அச்சடித்த ரூ.30,000 கோடி மதிப்பிலான 1000 ரூபாய் தாள்களில் தவறுகள் இருப்பதால் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட கரன்ஸிகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கிய பிரத்யேகப் பாதுகாப்பு அம்சமாக கருதப்படும் வெள்ளி இழை இன்றி 5AG, 3AP என்ற வரிசைப்படி சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளதாக கூறப்படுகிறாது.  இதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10 ஆயிரம் கோடி ரூபாய் பொதுமக்கள் புழக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், 5AG, 3AP வரிசையில் உள்ள 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 5AG, 3AP வரிசை நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வணிக வங்கிகளுக்கு அதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், மத்திய பிரதேசம், ஹோஷன்காபாத்தில் உள்ள Security Printing and Minting கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, பின்பு நாசிக்கில் உள்ள ரிசர்வ் வங்கி அச்சகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி SPMCIL அச்சகத்தின் நிர்வாக இயக்குநருக்கு விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தவறு நடந்தது நிரூபணம் ஆனால் SPMCIL அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply