சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஜித். அபூர்வ புகைப்படங்கள்
அஜித், ஷாலினி அஜித் மற்றும் அஜித்தின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் நேற்று சென்னை பாஸ்போர்ட் அலுவகத்திற்கு வந்தனர். அஜித் குடும்பத்தினர்களை பார்க்க நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அஜித் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதாகவும் அதற்காக அவர் பாஸ்போர்ட் மற்றும் விசா எடுக்க சென்னை பாஸ்போர்ட்டுக்கு வந்ததாகவும் அஜித் தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
அஜித் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் அவருடைய 57வது படத்தின் படப்பிடிப்பு வரும் மே முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.
Chennai Today News: Ajith family in Chennai passport office