லண்டனில் எம்.பி.ஏ.,

download (5)

இன்றைய உலகமயமாக்கல் சூழலில், பெரும்பாலான மாணவர்கள், விரும்பி தேர்வு செய்யும் படிப்பாக மேலாண்மை பட்டப்படிப்பு அமைந்துள்ளது. அதிலும், வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் லண்டன் பல்கலைக்கழகங்களில் படிக்க பலருக்கும் அலாதி பிரியம் தான். லண்டனில் எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்களுக்காக அங்குள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் இனி…

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை கேள்விப்படாதவர்கள் இந்த உலகில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகப்பிரபலான கல்வி நிறுவனம். சர்வதேச சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களின் பட்டியலில், கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியின் ‘ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூல்’ இடம் பிடித்துள்ளது.

கால அளவு: 12 மாதங்கள்

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: ஜிமேட் தேர்வில் 650க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் மேலாண்மை பட்டப் படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர்.

ஆங்கில மொழிப் புலமையை பரிசோதிக்கும் டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்.,  தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். பெண்களுக்கு 38 சதவீதம் இடஒதிக்கீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சேர்க்கை விண்ணப்பம் தொடங்கும் நாள்: பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் முதல் அல்லது கடைசி வாரநாட்களில் தொடங்கும்.

மேலும் விவரங்களுக்கு: www.jbs.cam.ac.uk

லண்டன் பிசினஸ் ஸ்கூல்
ஏதுவான சுற்றுச்சூழல் மற்றும் செயல்முறை கல்வியின் மூலம் மாணவர்களுக்கு மேலாண்மை கல்வியை மிகவும் சிறப்பாக வழங்குகிறது, எல்.பி.எஸ் எனப்படும் லண்டன் பிசினஸ் ஸ்கூல்.

படிப்பின் கால அளவு: 15-21 மாதங்கள்

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: மேலாண்மை பட்டப் படிப்புக்கு, ‘ஜிமேட்’ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்து, நேர்முகத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும்.

ஆங்கில மொழிப் புலமையை பரிசோதிக்கும் ‘டோபல்’ அல்லது ‘ஐ.இ.எல்.டி.எஸ்.,’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.

மேலும் விவரங்களுக்கு: www.london.edu

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
தொழில் முறைகளுக்கு ஏற்றவாறு மேலாண்மை கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு நிகரானது வேறு எதுவும் இல்லை. பழமையும், புதுமையும் ஒருங்கே அமைந்து, சர்வதேசப் புகழ்பெற்றுள்ள இப்பல்கலைக்கழகத்தில் படிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது!

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கால அளவு: 12 மாதங்கள்

சேர்க்கை முறை: ஜிமேட் மற்றும் ஜி.ஆர்.இ., தேர்வில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இறுதியில் நேர்முகத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும். ஆங்கில மொழிப் புலமையை பரிசோதிக்க நடத்தப்படும் டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

சேர்க்கை துவங்கும் நாள்: பிப்ரவரி 12

மேலும் விவரங்களுக்கு: www.ox.ac.uk

மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
வணிக நிறுவனங்களுடன் இணைந்து ஆறு மாதங்கள் தொழில் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குவதால், இங்கு மேலாண்மை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சர்வதேச அளவில் சிறந்து விளங்குகின்றனர்!

கால அளவு: 18 மாதங்கள்

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: ஜிமேட், ஜி.ஆர்.இ., அல்லது மேட் தேர்வில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்து, நேர்முகத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும். ஜிமேட் அல்லது ஜி.ஆர்.இ., போன்ற தகுதித் தேவுகளில் பங்குபெறாத மாணவர்கள், மான்செஸ்டர் பல்கலை சார்பில், நடத்தப்படும் ‘மேட்’  தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஆங்கில மொழிப் புலமைத் தேர்வான டோபல் மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.

சேர்க்கை துவங்கும் நாள்: ஆகஸ்ட் 30

மேலும் விவரங்களுக்கு: www.mbs.ac.uk

 

Leave a Reply