தாய்லாந்து கடற்கரை கிராமத்தில் MH370 விமானத்தின் பாகங்கள்? பெரும் பரபரப்பு
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலேசிய விமான MH370 திடீரென காணாமல் போனதால் அதில் பயணம் செய்த 239 பேர் என்ன ஆனார்கள் என்று இன்று வரை புரியாத மர்மமாக உள்ளது. இந்த விமானம் கடலில் விழுந்திருக்கலாம், கடத்தப்பட்டிருக்கலாம் என பல்வேறு யூகத்தில் உருவான தகவல்கள் வெளியானபோதிலும் உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று தாய்லாந்து நாட்டில் கிராமத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் விமானத்தின் பாகம் ஒன்றை அந்த கிராமத்தினர் கண்டெடுத்ததாகவும், இந்த பாகம் MH370 விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்றும் தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Tanyapat Patthikongpan, head of Pak Phanang district என்ற பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த பாகம் 3 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது. மலேசிய மற்றும் தாய்லாந்து விமான துறை அதிகாரிகள் இந்த பாகத்தை ஆய்வு செய்து வருவதாகவும், இந்த பாகமும் MH370 விமானத்துக்கு உரியதா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Chennai Today News: More wreckage from missing Malaysia Airlines MH370?