2 மாதமே ஆன ஃபேஸ்புக் அதிபர் மகளுக்கு நீச்சல் பயிற்சி. இணையத்த்தில் வைரலாகும் புகைப்படங்கள்
உலகின் நம்பர் ஒன் சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது இரண்டு மாத மகளுக்கு நீச்சல் கற்று கொடுக்க ஆரம்பித்துவிட்டதாக இணையதளங்கள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள்தான் முதன்முதலாக வெளியாகும் மார்க் அவர்கள் மகளின் புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாதமே ஆன தனது செல்ல மகளுக்கு மார்க் நீச்சல் பயிற்சி கொடுத்த போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை மார்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது மகள் “மேக்சிற்கு இதுதான் முதல் நீச்சல். இதை அவள் மிகவும் விரும்பினாள்” என்ற குறிப்புடன் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதை மார்க்கைப் பின் தொடரும் 4.8 கோடி பேரில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
மார்க் படிக்கிறாரோ இல்லையோ புகைப்படத்திற்கு கீழே சோ நைஸ், சோ க்யூட் என்று கருத்துக்களையும் பலர் பதிவிட்டும் வருகின்றனர்.