விஜயதாரிணிக்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. குஷ்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்த விஜயதாரிணி எம்.எல்.ஏவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து விஜயதரணி தரப்பில் இருந்து இளங்கோவன் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, விஜயதாரிணியை அதிரடியாக கட்சியின் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் விஜயதாரிணி விரைவில் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தன்னை கட்சியின் பதவியில் இருந்த நீக்க குஷ்புவும் ஒரு காரணம் என்பது போல் விஜயதாரிணியின் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, “விஜயதரணியின் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. அவருக்கு பதில் சொல்வதற்கு எனக்கு நேரமும் இல்லை. நாங்கள் கட்சி பணியாற்றி கொண்டிருக்கிறோம். நேற்றும் திருநெல்வேலி அம்பா சமுத்திரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசி வந்திருக்கிறேன். கட்சி வேலையில் ‘பிசி’யாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்
விஜயதாரிணியின் பதவி நீக்கத்தால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
Chennai Today News: I don’t have time to answer Vijayadharini said Kushboo