உலகில் ஊழலற்ற நாடு எது? கருத்துக்கணிப்பின் முடிவு அறிவிப்பு
உலக நாடுகளில் உள்ள ஊழல்போக்கு குறித்த தரப்பட்டியல் ஒன்றி சமீபத்தில் எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரப்பட்டியலில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 9 இடங்கள் முன்னேற்றம் கண்டு 76-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு உலகில் உள்ள 168 நாடுகளில் ஊழல் இல்லாத நாடு எது? என்பது குறித்த தரப்பட்டியலை எடுத்து அதன் முடிவை சற்று முன்னர் அறிவித்துள்ளது.
ஊழலற்ற நாடுகளில் முதலாவது இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே நாடுதான் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலக வங்கி, சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்கள் இணைந்து, உலக நாடுகளில் நடைபெறும் பொதுத்துறை ஊழல்களில் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த ஊழல் பார்வை குறியீடு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தரப்பட்டியல் குறித்து டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறும்போது, “2015-ம் ஆண்டை பொருத்தவரை உலகளவில் ஊழலை எதிர்த்து மக்களின் குரல் ஓங்கி ஒலித்த மற்றொரு ஆண்டு என்றே சொல்ல வேண்டும். மக்களின் எதிர்ப்புக் குரல் ஆட்சியாளர்களுக்கு வலுவான செய்தியை தாங்கிச் சென்றுள்ளது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் பாய வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இந்தத் தரநிலைப் பட்டியலில், இந்தியா 9 இடங்கள் ஏற்றம் கண்டு 76-வது இடத்தை அடைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து, பர்கினோ பாசோ, பிரேசில், டுனீசியா, ஜாம்பியா ஆகிய நாடுகளும் இதே இடத்தில் இருக்கின்றன. சோமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்த நாடாக கடைசி இடத்தில் இருக்கின்றன.