சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் பாகிஸ்தானில் இருந்து வந்ததா?

சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் பாகிஸ்தானில் இருந்து வந்ததா?

baloonடந்த 26ஆம் தேதி நாடு முழுவதும் 67வது குடியரசு தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் ராஜஸ்தானில் மட்டும் மர்ம பலூன் ஒன்று பறந்து வந்ததால் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. தற்போது அந்த பலூன் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தியாவின் 67-ஆவது குடியரசு தினம் டெல்லி ராஜபாதையில் கோலாகலமாக கடந்த 26ஆம் தேதி கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் மர்ம பலூன் ஒன்று பறந்து வந்தது.  கடல் மட்டத்திலிருந்து 25,000 அடி உயரத்தில் பறந்து வந்த அந்த மர்ம பலூனை இந்தியப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இதனால் அந்த பலூன் வெடித்து சிதறியது.

வெடித்துச் சிதறிய பலூனில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களை ராணுவ வீரர்கள் சோதனை செய்தபோது அதில் அபாயகரமான வெடிபொருள்கள் எதுவும் இல்லை என்பது நிரூபணம் ஆனது. இருப்பினும்  அந்த பலூன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானில் இருந்து அனுப்பியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஒரு தாக்குதல் மேற்கொண்டால், இந்தியப் பாதுகாப்புப் படை எவ்வளவு துரிதமாக அதை எதிர்கொள்கிறது? என்பதைக் கணிப்பதற்காக அந்த மர்ம பலூன் பறக்க விடப்பட்டிருக்கலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம்  அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகவும்,” சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பலூனில் “ஹேப்பி பர்த்டே’ என்ற ஆங்கில வாசகம் அச்சிடப்பட்டிருந்தகாவும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விவகாரம் குறித்து நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Leave a Reply