தீவிரவாதிகள் அமைப்புடன் முதல்வருக்கு தொடர்பா? கவர்னரின் அதிர்ச்சி அறிக்கை

தீவிரவாதிகள் அமைப்புடன் முதல்வருக்கு தொடர்பா? கவர்னரின் அதிர்ச்சி அறிக்கை
arunachal pradesh
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு ஒருசில கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது ஏன் என்று ஆளுனர் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“அருணாச்சல பிரதேச அரசை நடத்துவது சிறுபான்மையினரே, மேலும் முதல்வர், மற்ற அமைச்சர்கள் ஆளுநரை எதிர்த்து செய்தி அறிக்கைகளை வெளியிடுகின்றனர்”

நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது, குறிப்பாக டிசம்பர் 15, 16, 17 தேதிகளில் சட்டம் மற்றிம் அரசு எந்திரம் முழுக்கவும் பணியாற்றவில்லை. அரசு இருப்பதாகவே தெரியவில்லை, அராஜகம்தான் நிலவியது

என்னை அச்சுறுத்தும் வார்த்தைகளால் வசைபாடுகின்றனர், உடல் ரீதியாகக் கூட என்னைத் தாக்க திட்டமிட்டனர், ஆனால் டிசம்பர் 15-ம் தேதி எனது மெய்க்காப்பாளர்களால் காப்பாற்றப்பட்டேன்”

முன்னாள் முதல்வர் நபம் துகி, நாகாலாந்து-காப்லாங் தேசிய சோஷலிச கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்

முதலமைச்சரின் ஒழுக்கமின்மையையும், சட்டவிதிகளுக்கு கட்டுப்பாடாத குலைவையும் வளர்த்து விட்டார். அரசு அதிகாரிகள் மட்டுமே கொண்ட நயீஷி உயர்மட்ட அமைப்பிற்கு நிதி உதவி அளித்து அவர்களிடத்தில் அரசியலை புகுத்துகிறார்.

முன்னாள் முதல்வர் நபம் துகி தானும் நியீஷி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதன் மாணவர் அமைப்பையும், பிற வகுப்புவாத சக்திகளையும் ஆளுநருக்கு எதிராக தூண்டி விடுகிறார்

இவ்வறு அருணாச்சல பிரதேச மாநில ஆளுனர் ராஜ்கோவா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Chennai Today News: Arunachal Pradesh Governor’s shocking statement about former CM

Leave a Reply