ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது 20ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி. தொடரையும் வென்றது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தாலும், 20 ஓவர்கள் போட்டி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே முதல் 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி நேற்று மொல்போர்ன் நகரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 60 ரன்களும், விராத் கோஹ்லி 59 ரன்களும், தவான் 42 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. விராத்கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்