மேத்தி பைகன்

12bf918b-568f-4112-a39b-fe8a19f2d00f_S_secvpf

தேவையான பொருட்கள் :

கஸ்தூரி மேத்தி – 1 டீஸ்பூன்
கத்திரிக்காய் – 250 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி – ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 2
பிரியாணி இலை – 1
வெங்காயம் (பெரியது) – 2
தக்காளி – 2
கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* ப.மிளகாய், கத்தரிக்காய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்

* கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள கத்தரிகாயை போட்டு தனியாக வறுத்து வைக்கவும்.

* மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிதளவு சீரகம், சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய், பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* அதன் பின்னர் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அவை நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா போட்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.

* கஸ்தூரி மேத்தி மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வறுத்து வைத்துள்ள கத்திரிகாய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

* சுவையான மேத்தி பைகன் ரெடி.

* தயிர் சாதம், ரசம் சாதம், வெரைட்டி ரைஸ், சப்பாத்தி மற்றும் புல்காவுக்கு இது பொருத்தமாக இருக்கும்.

* கஸ்தூரி மேத்திக்கு பதிலாக வெந்தயக்கீரையையும் பயன்படுத்தலாம்.

Leave a Reply