தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12-ந் தேதி நடக்கிறது

201601290213460012_South-Srinivasa-Perumal-Temple-Consecrated-12th-Going_SECVPF

புதுவை முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 12-ந்தேதி நடக் கிறது. இதையொட்டி 31-ந் தேதி மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

சீனிவாச பெருமாள்

புதுவை முத்தியால்பேட்டையில் பிரசித்திபெற்ற தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 1879-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தன.

மேலும் பக்தர்கள் கோவிலுக்குள் தாராளமாக சென்று வழிபட முடியாதபடி இட வசதி இல்லாமல் இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து கோவிலின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு ரூ.2 கோடி செலவில், ஆகம விதிப்படி புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு கோவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கோவிலில் ராஜகோபுரமும் புதுப்பிக்கப்பட்டது. இந்த திருப் பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மூலவர் சிலை பிரதிஷ்டை

அதையொட்டி வருகிற 31-ந்தேதி காலை 7-30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சீனிவாச பெருமாள் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப் படுகிறது. இதனை அடுத்து தாயார், லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப்ரவரி 8-ந் தேதி பெருமாள், தாயார் திருமஞ்சனமும், 9-ந் தேதி அனுக்ஞை, வாஸ்துசாந்தியும், 10-ந்தேதி காலை முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் ராஜகோபுர கலச ஸ்தாபனமும், 2-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 11-ந்தேதி காலை 9 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் மாலையில் 4-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 12-ந்தேதி காலை 6 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடு நடக் கிறது. 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இரவு 7மணிக்கு சீனிவாச பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவும் மணவாள மாமுனிகள் சேஷ வாகனத்தில் எதிர்சேவை புறப்பாடும் நடக்கிறது.

Leave a Reply