குன்னூர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர்

201602010106235390_CoonoorTemple-Feast-of-Saint-SebastianMultitudes_SECVPF

குன்னூர்,

குன்னூரில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று நடந்தது. இதில், திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

செபஸ்தியார் ஆலய திருவிழா

குன்னூர் மவுண்ட்ரோட்டில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 22–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் புனித அம்பு திருநாள் கொண்டாடப்பட்டது. காலையில் திருப்பலி, புனிதரின் ஜெபம், புனித செபஸ்தியார் திருஉருவம் பிரதிஷ்டை, திருஉருவம் வீடுகளுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லுதல், புனித அம்புகள் போன்றவை நடந்தது.

புனிதசெபஸ்தியார் திருஉருவ ஊர்வலம்

பங்கு திருவிழா நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஊட்டி ஜோசப் ஆலய பங்கு குரு சோனிவடயம் பரம்பில் தலைமையில் திருப்பலி நடந்தது. காலை 10 மணிக்கு ஆடம்பர பாடல் திருப்பலி, அதன் பின்னர் அன்பின் விருந்து, மாலை 4.30 மணிக்கு பாடல் திருப்பலி நடந்தது. தொடர்ந்து 6.30 மணிக்கு புனித செபஸ்தியாரின் திருஉருவம் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

ஊர்வலம் மவுண்ட்ரோடு வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஜெபம் நடைபெற்றது. பின்னர் அங்கு இருந்து ஊர்வலம் புறப்பட்டு ஆலயத்தை அடைந்ததும், அங்கு திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு குரு ஜிஜோ வாத்தேலில் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

Leave a Reply