ராகுல்காந்தி திசை தெரியாத கப்பல். மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்

ராகுல்காந்தி திசை தெரியாத கப்பல். மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்
pon. radhakrishnan
பிரதமர் நரேந்திரமோடி கோவை வரவுள்ளதை அடுத்து நேற்று கோவை வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறி தாவது: தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண கால அவகாசம் தேவை என்ற நிலையில், அதுவரை மீனவர்கள் கைதாகாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆனால், மீனவர்கள் ஒத்துழைப்பு அளிக்காமல் கைது ஆகி வருவதால், அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை மட்டும் மேற்கொள்ள வேண்டி வருகிறது.

ராகுல்காந்தி திசை தெரியாத கப்பல். காங்கிரஸ் கட்சியும் தெளிவான நிலையில் இல்லை. ராகுல்காந்தி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் மோடி அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பி வருகிறார். ஆனால் அவை அனைத்தும் அவருக்கு தோல்வியையே அளித்து வருகின்றன.

சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா வீட்டின் மீதான தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. அவரை அரசியலில் இருந்து விரட்டியடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அவருக்கு அரசு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மிக மோசமான ஆட்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்சி நிற்கும் நிலையில் பாஜக இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் பலப்படுத்தப் படும்’ என்று கூறினார்

Leave a Reply