இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் (ஐ.இ.எஸ்.,) மற்றும் இந்தியன் ஸ்டேடிஸ்டிகல் சர்வீஸ் (ஐ.எஸ்.எஸ்.,) ஆகிய தேர்வுகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2016 தேதி நிலவரப்படி 21 முதல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மத்திய அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகையும் உண்டு.
கல்வித்தகுதி: பொருளாதாரப் பணியிடங்களுக்கு, எகனாமிக்ஸ், அப்ளைடு எகனாமிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், எகனோமெட்ரிக்ஸ் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புள்ளியியல் பணியிடங்களுக்கு, இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பில், புள்ளியியல், கணித புள்ளியியல் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 12
மேலும் விவரங்களுக்கு: www.upsconline.nic.in