விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஆதரவாக ஐ.நா தீர்ப்பு. அமெரிக்கா அதிர்ச்சி

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஆதரவாக ஐ.நா தீர்ப்பு. அமெரிக்கா அதிர்ச்சி

assangeவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிடிக்க அமெரிக்கா தொடரந்து முயற்சித்து வரும் நிலையில் ஐநா குழு அசாஞ்சேவுக்குச் சாதகமாக ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு அமெரிக்காவுக்கும் அதன் ஆதரவு நாடுகளுக்கும் ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஐ.நா இன்று அளித்துள்ள தீர்ப்பில் பிரிட்டனில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை தடுத்து வைக்கப்பட்டிருந்தது நியாயமற்ற செயல் என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பு இன்னும் ஐ.நாவிடம் இருந்து அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை எனினும் பிரபல தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன், ஸ்வீடன் நாடுகளால் தான் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக ஐ.நா.வில் முறையீடு செய்திருந்தார். ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதாக லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் தஞ்சம் புகுந்தார் அசாஞ்சே. 2014-ம்ஆண்டில்தான் தன்னை தடுத்து வைத்தது சட்ட விரோதமானது என்று ஐநா-வில் முறையிட்டிருந்தார்.

ஸ்வீடனில் பாலியல் புகார் குறித்த விசாரணையை எதிர்கொண்டு வருகிறார் அசாஞ்சே, தான் ஸ்வீடன் சென்றால் அங்கிருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவோம் என்று அசாஞ்சே திட்டவட்டமாகக் கருதுகிறார்.

இந்நிலையில் அசாஞ்சே முறையீடு குறித்து ஆய்வு செய்த ஐநா குழு, பிரிட்டனில் அசாஞ்சே தடுத்து வைக்கப்பட்டிருந்தது தன்னிச்சையானதும், நியாயமற்றதுமாகும் என்று கூறியுள்ளதோடு, தங்கள் முடிவுகளை நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐநா குழுவின் இந்த அறிவிப்பு பிரிட்டன், ஸ்வீடன் நாட்டு அதிகாரிகளைப் பிணைக்காது என்பதால் அசாஞ்சேயை கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று பிரிட்டிஷ் போலீஸும், பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகமும் கூறி வருகின்றன

Chennai Today News: WikiLeaks’ Assange ‘arbitrarily detained’ in Ecuador’s London embassy, U.N. panel to say

Leave a Reply