பனிப்பாறையில் புதையுண்ட 10 இந்திய ராணுவ வீரர்கள் சென்னையை சேர்ந்தவர்களா?
நேற்று இந்திய ராணுவத்திற்கு ஒரு துயரமான நாள். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள சியாச் என்ற சிகரத்தில் 19 சுமார் ஆயிரம் உடி உயரத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலை ஒன்றின் மீது நேற்று கடந்த 3ஆம் தேதி ராணுவ நிலை மீது பெரிய பனிப்பாறை ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் புதைந்து மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் கொண்ட மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் பனிப்பாறை பெரிய அளவில் இருப்பதால் அதை உடைத்து உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், பனிப்பாறையில் புதையுண்ட 10 வீரர்களும் இறந்து விட்டதாக நேற்று இரவு ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இந்த செய்தி இந்திய மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய நிலையில் மரணம் அடைந்த 10 வீரர்களும் மெட்ராஸ் பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் மரணம் அடைந்த வீரர்கள் அனைவரும் சென்னை அல்லது தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
Chennai Today News: Siachen avalanche: Army declares all trapped soldiers dead; PM Narendra Modi pays condolences