நயன்தாராவுடன் இணையும் சிங்கப்பூர் பாடகி

நயன்தாராவுடன் இணையும் சிங்கப்பூர் பாடகி
lady-kash
ஆரி, நயன்தாரா நடித்த ‘மாயா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதே பாணியில் மீண்டும் ஒரு பேய்ப்படத்தில் நடிக்க நயன்தாரா ஆகியுள்ளார். இந்த படத்தை தாஸ் என்பவர் இயக்க, பிரபல இயக்குனர் சற்குணம் தயாரிக்கின்றார்.

இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களையும் பாடகர்களையும் பணிபுரிய வைக்க இந்த படத்தின் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் தீவிர முயற்சியில் உள்ளனர். முதலாவதாக பிரபல சிங்கப்பூர் பாடகி லேடி கேஷ் என்பவர் ஒரு பாடல் பாட ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘எந்திரன்’ படத்தில் இரும்பிலே ஒரு இருதயம்’ என்ற பாடலின் ஆங்கில வரிகளை பாடியவர்.

இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் ஏற்கனவே வடகறி மற்றும் புகழ் படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் இந்த படம் இவர்களது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply