கேரள சட்டசபையில் ஆளுனர் உரையின்போது எதிர்க்கட்சிகள் அமளி

கேரள சட்டசபையில் ஆளுனர் உரையின்போது எதிர்க்கட்சிகள் அமளி
kerala
கேரளாவில் முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கேரள சட்ட்சசபை கூட்டம் இன்று காலை முதல் பரபரப்பாக காணப்படுகிறது. எதிர்க்கட்சியான இடதுசாரிகள் இன்று கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததோடு சட்டசபை வராண்டாவில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பிதால் சட்டசபை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

கேரளாவில் கடந்த சட்டசபை கூட்டம் நடந்தபோது எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டம் காரணமாக நிதியமைச்சர் மாணி பதவி விலகினார். அதேபோல் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் உம்மன்சாண்டி பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஏற்கனவே இடதுசாரிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் கேரள சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில், அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து கவர்னர் சதாசிவம் உரை நிகழ்த்துவார் என்றும் கூறப்பட்டது. அதன்படி, இன்று காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும் ஆளுனர் சதாசிவம் உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது சபையில் இருந்த இடதுசாரி கட்சியினர் எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் தலைமையில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி பதவி விலகக் கோரி கோஷங்கள் எழுப்பினர். ஊழல் மந்திரிகள் பதவி விலக வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பிடித்து கோஷமிட்டனர்.

அவர்களை ஆளுனர் சதாசிவம் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சியினரின் கோஷம், எனக்கு எதிரானது அல்ல, என்று எனக்கு தெரியும். இருந்தாலும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுனர் உரை நிகழ்த்துவது என்பது அரசியல் மரபு. அதைத்தான் நான் நிறைவேற்ற வந்துள்ளேன். அதற்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சியினர் கோஷத்தை நிறுத்தவில்லை.

Leave a Reply