பாழுங்கிணற்றில் விஜயகாந்த் விழமாட்டார் என நம்புகிறேன். திருமாவளவன்
திமுக, பாஜக, தேமுதிக கூட்டணி அமைய வேண்டும் என பாஜக முன்னணி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டணி அமையுமா? என மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான திருமாவளவன் கருத்துகூறியபோது, ‘பாழும் கிணற்றில் விஜயகாந்த் விழமாட்டார் என்றும் நம்புவதாகத் தெரிவித்தார். மேலும் திருமாவளவன் செய்தியாளர்களிடம், “மரக்காணம் கலவரத்தில் தண்டனை பெற்ற 6 பேருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இது குறித்து எங்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்.
மக்கள் நலக்கூட்டணி குறித்து சமீபத்தில் விஜயகாந்த் பாசிட்டிவ் கருத்தை கூறியதால் அவர் மக்கள் நலக்கூட்டணியுடன் தான் கூட்டணி வைப்பார் என வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் டுவிட்டர் திடீரென குட்டையை கிளப்பியுள்ளது.
விஜயகாந்த் இதுவரை கூட்டணி குறித்து எந்தவித முடிவையும் தெரிவிக்காததால் திமுக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி, பாஜக ஆகிய கட்சிகள் கலக்கத்தில் உள்ளது.