சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேச வேண்டாம். மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் நேற்று சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அந்த செல்போன் வெடித்ததால் கண்பார்வையை இழந்தான். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுவனை நேரில் சந்தித்து அந்த சிறுவனின் பெற்றோர்களுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பின்னர் இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
செல்லிடப்பேசியில் சார்ஜ் செய்து கொண்டே பேசிய போது அந்த செல்லிடப்பேசி வெடித்ததில் 9 வயது சிறுவன் தனுஷ் தன் கண் பார்வையை இழந்து படுகாயமுற்ற சம்பவம் என் மனதை உலுக்கி விட்டது. எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அச்சிறுவனை சந்தித்து நலம் விசாரித்து, பெற்றோருக்கும் ஆறுதல் கூறினேன்.
கண் பார்வை பாதிப்புக்குள்ளான அச்சிறுவனை பார்த்து வேதனை அடைந்தேன். இது போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க செல்லிடப்பேசியை சார்ஜில் போட்டுக் கொண்டே இனி யாரும் தயவு செய்து பேச வேண்டாம் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறேன்
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்