கருணாநிதியை எதிர்த்து போட்டியிடும் காவல்துறை உயரதிகாரி? பெரும் பரபரப்பு

கருணாநிதியை எதிர்த்து போட்டியிடும் காவல்துறை உயரதிகாரி? பெரும் பரபரப்பு
karunanidhi
தமிழகத்தில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளிலும் தேர்தலில் சீட் கேட்டு கட்சி தலைமையிடம் தொண்டர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி கமிஷனர் பீர் முகம்மது தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு அ.தி.மு.க.வில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் கேட்டுள்ள தொகுதி சென்னை திருவல்லிக்கேணி. இந்த தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட ஏராளமானோர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் கருணாநிதிக்கு எதிராக போட்டியிட இவர் துணிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி பீர் முகம்மது அவர்கள் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, “எனக்கு சிவகங்கை மாவட்டம் தான் பூர்வீகம். இருந்தாலும், 25 ஆண்டுகளாக சென்னையில் தான் சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என்று காவல் பணியாற்றி இருக்கிறேன். அதிகமாக திருவல்லிக்கேனி காவல் மாவட்டத்தில்தான் என்னுடைய சர்வீஸ் இருந்திருக்கிறது. திருவல்லிக்கேனி போலீஸ் உதவி கமிஷனராக இருந்து இந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறேன். மேலும் இங்கு அனைத்து மதத்தினரும் என்னிடம் அன்பாக பழகுவார்கள். அதுமட்டுமின்றி அண்மையில், சென்னையை புரட்டிய மழை வெள்ளத்தின்போது இந்த பகுதி மக்களுக்கு என்னுடைய பணியை அதிகப்படுத்திக் கொண்டேன். அதில்தான், நிம்மதி அடைவதாக நம்புகிறேன். திமுக தலைவர் கருணாநிதி இந்த போட்டியிட போவதாக தகவல் வந்துள்ளது. ஆனால் என்னுடைய முடிவை பின்வாங்காமல் அவருடன் மோத தயாராகி வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

திமுக தலைவரை எதிர்த்து போட்டியிட அந்த பகுதியில் செல்வாக்குள்ள காவல்துறை அதிகாரியை அதிமுக களமிறக்கினால் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் யாருக்கு வெற்றி என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply