கருப்பு-வெள்ளையில் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகள்
மொராக்கோ நாட்டில் உள்ள ‘சேல் என்ற நகரில் வாழும் தம்பதிக்கு அதிசயமான இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறந்தால் மிக எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரே மாதிரி குழந்தைகள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்று கருப்பு நிறத்திலும் இன்னொரு குழந்தை வெள்ளை நிறத்திலும் பிறந்துள்ளதால் எளிதில் அடையாளம் காணுவ வகையில் உள்ளது. ஒரு மில்லியன் இரட்டையர்களில் ஒரு இரட்டை குழந்தைதான் இதுமாதிரி இருவேறு நிறங்களில் பிறக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மைலா மற்றும் அனயா யார்க்கர் என்ற இந்த இரட்டை குழந்தைகளில் மலா, தன்னுடைய தாயாரை போல வெள்ளை நிறத்தில் பிரெளன் நிற கண்களுடனும், அனயா யார்க்கார் தன்னுடைய தந்தையை போல கருப்பு நிறத்தில் பிரெளன் கண்களுடன் உள்ளது. இந்த அதிசய இரட்டை குழந்தைகளை பார்க்க அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.
கருப்பு, வெள்ளையாக தங்களது இரண்டு குழந்தைகள் இருந்தாலும் இருவரையுமே ஒரே மாதிரிதான் வளர்ப்போம் என்றும், அவர்களுக்குள் நிற வேறுபாடு இல்லாத வகையில் வளர்க்கவும் தாங்கள் உறுதி செய்துள்ளதாக இந்த குழந்தையின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.