தமிழத்திற்கு மே 14-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்?
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைவதால் அதற்கு முன்னர் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில் வரும் மே 14ஆம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறி வருகின்றன.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே மாதம் 22ம் தேதி முடிவடைகிறது. இதே போல தமிழகம் உட்பட, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளன. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதில் தலைமைத் தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் தமிழகத்தில் வரும் மே மாதம் 14ம் தேதி சனிக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவுவை நடத்தவும், 18ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்தகவும் தேர்தல் ணையம் பரிசீலித்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு அதிகாரபூர்வமாக ஒருசில நாட்களில் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.