அரசு நெறிமுறைகளை மீறி அபுதாபி இளவரசருக்கு வரவேற்பு அளித்த பிரதமர் மோடி

அரசு நெறிமுறைகளை மீறி அபுதாபி இளவரசருக்கு வரவேற்பு அளித்த பிரதமர் மோடி
abudabi
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகைதரும்போது இந்திய பிரதமர் ஒருவர் விமான நிலையத்திற்கு சென்று அவர்களை அவர்களை வரவேற்பது அரசு நெறிமுறைகளை மீறும் செயலாக கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று டெல்லி வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் அவர்களை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளார்.

54 வயதான அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று புதுடெல்லிக்கு விமானம் மூலம் மாலை 6 மணியளவில் இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி அரசு நெறிமுறைகளை மீறி வரவேற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் இந்திய பிரதமர் ஒருவர் முக்கிய வெளிநாட்டு தலைவர்களை நேரடியாக சென்று வரவேற்ப்பது இது முதல் முறை அல்ல என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்யை நேரடியாக விமான நிலையத்தில் சென்று வரவேற்றார் என்றும் பாஜக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஷேக் முகமது உடன் அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர்களும் இந்தியா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply