ஐஐடி ரூர்க்கியில் பிஎச். டி. படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

1

ஐஐடி ரூர்க்கியில் பிஎச். டி. படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. 2016-ம் கல்வியாண்டில் இந்த படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். இந்த படிப்பில் சேர பட்டமேற்படிப்பை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது இன்ஸ்டிடியூட்டில் பயின்று இருக்கவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவர். http://www.iitr.ac.in/ என்ற இணையதள முகவரியை மாணவர்கள் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விண்ணப்பித்த பிறகு விண்ணப்பங்களை பிரிண்ட்-அவுட் எடுத்து ‘PG Admissions Office, IIT Roorkee, Roorkee – 247667, Uttarakhand’ என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பக்கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும். விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப பிப்ரவரி 29 கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த மார்ச் 2 கடைசி நாள். பிரிண்ட் அவுட் விண்ணப்பங்கள் மார்ச் 4-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

Leave a Reply