உலகின் மிகப்பெரிய புத்தர் சிலையை பார்க்க குவியும் கூட்டம்
உலகிலேயே கல்லால் செய்யப்பட்ட மிகப்பெரிய புத்தர் சிலை மேற்கு சீனாவில் உள்ள Sichuan என்ற பகுதியில் உள்ளது. 1300 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மலையை குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலையை பார்க்க உலகெங்கிலும் இருந்து கூட்டம் குவிந்து கொண்டு இருப்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு சீனாவில் உள்ள Sichuan என்ற பகுதியில் உள்ள புத்தர் சிலையை பார்க்க சீனர்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதியில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். கடல் நடுவே மலையோடு மலையாக அமைந்திருக்கும் இந்த சிலையை வழிபட்டால் மனதில் நினைத்தது நடக்கும் என பலர் நம்புகின்றனர். விரைவில் சீன புத்தாண்டு வரவுள்ளதை அடுத்த இந்த சிலையை பார்க்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்,
230 அடி உயரமுள்ள இந்த கல்சிலை, உலகின் மிகப்பெரிய கல்லினால் செய்யப்பட்ட புத்தர் சிலை என யுனெஸ்கோ அறிவித்துள்ளது. கி.பி. 713ஆம் ஆண்டு டாங் அரசர் காலத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. இந்த புத்தர் சிலையின் பாதங்கள் மட்டுமே 36 அடி நீளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.