திமுக-பாஜக கூட்டணி குறித்து சுப்பிரமணியசுவாமி கூறியது நல்ல காமெடி. குஷ்பு

திமுக-பாஜக கூட்டணி குறித்து சுப்பிரமணியசுவாமி கூறியது நல்ல காமெடி. குஷ்பு
kushbooதமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் கடைசிகட்ட கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி இறுதிசெய்யப்படும் என கூறப்படும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணையுமா? அல்லது பாஜக இணையுமா? என்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியதாவது: “தமிழகத்தில் 1.50 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக  திமுக சொல்லியிருக்கிறது. தமிழக காங்கிரசும் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளது. இன்னும் எத்தனை பேர் போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் இதில் அலட்சியம் காட்டாமல், கவனமாக கையாண்டு, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி வாக்காளர்கள் மூலம் வெற்றி பெற அதிமுக முயல்கிறது. இது அதிமுகவுக்கு கைவந்த கலை. தற்போது அதிமுகவுக்கு தேர்தலில் தோல்வி ஏற்படும் என பயமுள்ளதால் இந்த மாதிரி விஷயங்கள் மறுபடியும் நடக்கிறது.
திமுக –  பா. ஜனதா கூட்டணி உருவாகும் என சுப்பிரமணியசாமி தெரிவித்த தகவல் காமெடியாக இருக்கிறது. பா.ஜனதாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் – திமுக கூட்டணி ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பது டெல்லியில் இருந்து குலாம் நபி ஆசாத் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தெரியவரும்.
மோடியின் தமிழக வருகை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். மேடையில் மோடியும், பொன்.ராதாகிருஷ்ணனும் எவ்வளவு பொய் பேசினார்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கட்சியில்  மீது சிலர் புகார் கூறுவது கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தமிழகத்தில் மதுவிலக்கு தேவை என அதிமுகவை தவிர எல்லா கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் வருமானத்தை மட்டுமே பார்த்து மதுவிலக்கு பற்றி பேசாமல் இருக்கிறது அதிமுக. அவர்களுக்கான வருமானமும் நின்று போகும் என்பதால் இருக்கலாம். இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பதை மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு குஷ்பு கூறினார்

Leave a Reply