6 தேமுதிக எல்.எல்.ஏக்கள் இடைநீக்கம் ரத்து. காலம் கடந்து வந்த தீர்ப்பா?

6 தேமுதிக எல்.எல்.ஏக்கள் இடைநீக்கம் ரத்து. காலம் கடந்து வந்த  தீர்ப்பா?
dmdk
தமிழக சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரின் இடைநீக்கத்தை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. ஆனால் சட்டமன்ற கூட்டங்கள் அனைத்தும் முடிவடைந்து தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இந்த தீர்ப்பு வந்துள்ளதால் காலம் கடந்த தீர்ப்பு என டுவிட்டர், ஃபேஸ்புக் இணையதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ்  முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்ததால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதனையடுத்து தேமுதிக உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன், இப்பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். மேலும் அமளியில் ஈடுபட்ட தேமுதிக உறுப்பினர்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகிய 6 பேர்களையும் உரிமைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த இடைநீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெலமேஷ்வர், ஏ.எம்.சப்ரே ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் சட்டப்பேரவையில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்தனர். மேலும், இடை நீக்கம் செய்யப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ள என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply