மார்ச் முதல் வாரத்தில் கபாலி-தெறி இசை வெளியீடுகள்

மார்ச் முதல் வாரத்தில் கபாலி-தெறி இசை வெளியீடுகள்
theri-kabali
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டக்கத்தி இயக்குனர் ரஞ்சித் இயக்கி வரும் ‘கபாலி’ படத்தின் டீசர் வரும் மார்ச் மாதம் முதல் வாரம் வெளிவரும் என கலைப்புலி எஸ்.தாணு நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் அதே வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டையும் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இன்னொரு படமான விஜய்யின் ‘தெறி’ படத்தின் டீசர் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடும் அதே மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என தெரிகிறது. ஒரே வாரத்தில் இரண்டு கோலிவுட் சூப்பர் ஸ்டார்கள் நடித்த படங்களின் இசை வெளீயீடு நடைபெறவுள்ளதால் கோலிவுடில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடித்த ‘தெறி’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரும், ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடித்த ‘கபாலி திரைபடத்திற்கு சந்தோஷ் நாராயணனும் இசையமைத்துள்ளார். இரண்டு இசையமைப்பாளர்களில் வெற்றி பெறுவது யார்? என்பது மார்ச் முதல் வாரம் தெரிந்துவிடும்.

Leave a Reply