தமிழிசை செளந்திரராஜன் மகன் திருமணத்தில் ஜெயலலிதா-கருணாநிதி?

தமிழிசை செளந்திரராஜன் மகன் திருமணத்தில் ஜெயலலிதா-கருணாநிதி?
tamilisai- jaya 1
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் கட்சி தலைவர்களான கருணாநிதி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்பட பல தலைவர்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்துள்ளார். தனது மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவே அவர் ஜெயலலிதா உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசை செளந்தரராஜனின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும், கோவை தொழிலதிபர் டி.செல்வராஜின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் வரும் 17ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. அன்றைய மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பும் நடக்கவுள்ளது.
 

இந்த திருமண விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால் ஆகியோர் பங்கேற்க உள்ள நிலையில் இந்த திருமண விழாவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட பலர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வருக்கும் தமிழிசை செளந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளதால் அவர் இந்த திருமணத்திற்கு செல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply