இன்றைய ராசிபலன் 15/02/2016

astrology

இன்றைய ராசிபலன் 15/02/2016

மேஷம்
மதியம் 1.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வரும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். மதியம் 1.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
கடகம்
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திப்பீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
கன்னி
மதியம் 1.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மதியம் 1.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மகரம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மீனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆடை, ஆபரணம் சேரும். பணவரவு உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

Leave a Reply