தேசிய பாதுகாப்பு சட்டத்தில் டி.ராஜா மகளை கைது செய்ய வேண்டும். எச்.ராஜா ஆவேசம்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் டி.ராஜா மகளை கைது செய்ய வேண்டும். எச்.ராஜா ஆவேசம்
d.raja
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மகள் தனது சக மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியுள்ளதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் தனது மகளின் இந்த செய்கைக்காக டி.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால்  தமிழ்நாட்டில் அவர் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா மேலும் கூறியதாவது: “தி.மு.க.-காங்கிரஸ் ஏற்கனவே ஊழல் செய்து, கொள்ளை அடித்து உள்ளனர். மீண்டும் அவர்கள் கூட்டணி அமைத்து உள்ளனர். மக்கள் யாரும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுபோட மாட்டார்கள்.

பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் நாங்கள் ஏற்க தயாராக உள்ளோம். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Chennai Today News: JNU Row: D Raja Trashes Claim That Daughter Was Part Of ‘Anti-India’ Stir

Leave a Reply