பெட்ரோல் விலை குறைவு. டீசல் விலை உயர்வு. புதிய விலை குறித்த விபரங்கள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோ, டீசல் விலையில் மாற்றம் கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை 32 காசுகள் குறைக்கப்பட்டும், டீசல் விலை 28 காசுகளும் உயர்த்தப்பட்டும் உள்ளது. பெட்ரோல் விலை குறைந்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், சர்வதேச சந்தைக்கு ஏற்ப சரியான விலைகுறைப்பு விகிதம் இல்லை என்று தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டாலும் மத்திய அரசு சுங்க வரியை உயர்த்தியதால் அதன் பயன் நுகர்வோருக்கு சென்றடையவில்லை. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட விலை குறைப்பால் நுகர்வோர்கள் பயனடைவர். டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.59.95 ஆக உள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ரூ.59.63க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டீசல் விலை ரூ.44.68ல் இருந்து ரூ.44.96க்கு உயர்த்தி விற்பனை செய்யப்படும்
சர்வசேத சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களில் 6-வது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.